லாஸ் ஏஞ்சல்ஸ்,
உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகை ஜெசிகா சேஸ்டெய்ன் தட்டி சென்றுள்ளார். தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்(The Eyes of Tammy Faye) திரைப்படத்திற்காக ஜெசிகா சேஸ்டெய்னுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
* சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக 'கென்னித் பிரனாக்' வென்றுள்ளார்.
* சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை தி பவர் ஆப் தி டாக் திரைப்படத்திற்காக ஜேன் கேம்பியன் வென்றார்.
* சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஷியான் ஹெட்டர்' இயக்கிய 'கோடா' திரைப்படம் வென்றுள்ளது.
* லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி லாங் குட்பை' வென்றுள்ளது.
* சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'க்ரூல்லா' திரைப்படத்திற்காக ஜென்னி பெவன் வென்றார்.