கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 29- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 24, 11.40 PM
உக்ரேனில் சட்டமியற்றுபவர்கள் இன்று ரஷிய எதிரிப் படைகளுக்கு உதவுபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வாக்களித்தனர். உக்ரைனின் வெர்கோவ்னா ராடா உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு அரசுக்கு உதவும் நோக்கில் வேண்டுமென்றே செயல்பட்டதற்காக 10 முதல் 12 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க பெருமளவில் வாக்களித்தனர் என்று நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்ச் 24, 9.50 PM
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை (UNGA) உக்ரைனின் உதவி அணுகல் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பைக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது மற்றும் நாட்டில் "மோசமான" மனிதாபிமான சூழ்நிலையை உருவாக்கியதாக ரஷியாவை விமர்சித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக 140 நாடுகள் ஆதரித்தன. ஐந்து உறுப்பு நாடுகள் - ரஷியா, சிரியா, வட கொரியா, எரித்திரியா மற்றும் பெலாரஸ் ஆகியவை எதிராக வாக்களித்தன, மேலும் 38 நாடுகள் வாக்களிக்கவில்லை.
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர்.
மார்ச் 24, 8.30 PM
உக்ரைன் ரஷியா போர் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் அவரசமாக கூடினர்.
இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் பல ஆண்டுகளாக போரை நடத்த விரும்பவில்லை. நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம், என அவர் கூறினார்.
மாநாடு நிறைவடைந்த நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து கூறினார்.
அப்போது பேசிய யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், உக்ரைனில் ரஷியப் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்தார்.
தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக உக்ரைன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
நாங்கள் உக்ரைன் மக்களுடன் துணை நிற்கிறோம் என அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
நேட்டோ பாதுகாப்பு திட்டங்களை முடுக்கி விட்டுள்ளோம். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படையின் 40,000 வீரர்களை நிறுத்தியுள்ளோம், என, நேட்டோ நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு புதிய படைக்குழுக்கள் அனுப்பப்படும் என, யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் முன்னதாக அறிவித்திருந்தார்.
உக்ரைனுக்கு உதவுவதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் யென்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தயார் நிலையுடன் கூடிய அதிகளவிலான படைகள் கிழக்குப்பகுதியில் நிறுத்தப்படும் எனவும், வான் தளத்தில் அதிக ஜெட் விமானங்களும், கடல்வழி பாதுகாப்புக்காக, நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ராணுவ ஆயுதங்கள் அதிகரிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை பலப்படுத்தப்படும் எனவும், அணு ஆயுதங்கள் மற்றும் உயிரி ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்ள நேட்டோ உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில்,
உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு படையினரை திரும்பப்பெற வேண்டும் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தின் மார்ச் 16 தீர்ப்புக்கு பணிய வேண்டும், உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை வலியுறுத்தினர்.
மார்ச் 24, 7. 50 PM
வெண் பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்துத் தீப்பற்றி எரியும்போது 800 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை உருவாகும் என்பதால் மனிதர்களுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும். இவ்வகைக் குண்டுகளைப் போரில் பயன்படுத்துவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் போபஸ்னா நகரின் மீது ரஷிய ராணுவம் பாஸ்பரஸ் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியது. இதே குற்றச்சாட்டை அதிபர் ஜெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நேட்டோவில் காணொலியில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,
"இன்று காலை ரஷிய பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி உள்ளது. பெரியவர்கள் மீண்டும் கொல்லப்பட்டனர் மற்றும் குழந்தைகள் மீண்டும் கொல்லப்பட்டனர் என்றார். எங்கள் "மக்களையும் எங்கள் நகரங்களையும் காப்பாற்ற, உக்ரைனுக்கு இராணுவ உதவி தேவைப்படுகிறது.
ரஷியா தனது முழு ஆயுத யுக்தியையும் கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துகிறது. இதுவரை வழங்கப்பட்ட தற்காப்பு உபகரணங்களுக்கு மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கு நன்றி. உங்களது போர் விமானங்களில் ஒரு சதவீதத்தை நீங்கள் எங்களுக்குத் தரலாம் என்றார்.
முன்னதாக ஸ்வீடன் பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, உக்ரைன் மக்களுக்காக மட்டுமின்றி, முழு ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் போராடுகிறோம் என்றார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு அளவிலான உறுப்பினராக இருப்பதற்கு நாங்கள் தகுதியானவர்கள் என்பதைக் காட்டியிருக்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
மார்ச் 24, 6.30 PM
ரஷிய அதிபர் புதின் எல்லையை மீறி காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம்சாட்டினார். உக்ரைன் நெருக்கடி, உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் துயரம் மற்றும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள நாம் இன்னும் என்ன உதவி செய்ய முடியும்? என்பது குறித்து நேட்டோ ஆலோசிக்க வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.
மார்ச் 24, 6.50 PM
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை இங்கிலாந்து விதித்துள்ளது. அதில், ரஷியாவை சேர்ந்த மேலும் 65 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே ரஷிய அரசாங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், பணக்கார தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
மார்ச் 24, 6.30 PM
இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் தலைநகர் கீவ்வை முற்றுகையிட்டிருக்கும் ரஷிய படைகள் மனச்சோர்வுடன் உள்ளதாகவும் அவர்கள் சுற்றி வளைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறது.
நேட்டோ தலைவர்கள் பங்கேற்கும் அவசரகால உச்சிமாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளைக் குவிக்க ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று நேட்டோவின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு நான்கு புதிய போர்க்கால குழுக்கள் அனுப்பப்படும் என்று யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகிறார்.
மார்ச் 24, 5.50 PM
உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையாக கார்கீவில் உள்ள இஸும் நகரை ரஷிய ராணுவம் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கோனஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்நகரில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக, உக்ரைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறையின் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், கார்கீவின் தென் கிழக்கில் உள்ள சிறிய நகரத்தில் எதிர் தாக்குதலை உக்ரைன் ராணுவம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
கார்கீவின் மையப்பகுதியாக உள்ள இஸும் நகரில், சுமார் 50,000 பேர் வசித்துவருகின்றனர். அங்கு முக்கியமான ரெயில்வே சந்திப்பு ஒன்றும் உள்ளது.
மார்ச் 24, 4.30 PM
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலியில் உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-
நேட்டோ, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜி7 உச்சிமாநாடுகளின் முடிவுகள் உக்ரைனுக்கு "நண்பர் யார்" என்பதை வெளிப்படுத்தும். "அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும். அவர்கள் எல்லேரும். வாழ்வாதாரப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்க வேண்டும். அர்த்தமுள்ள படிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த மூன்று உச்சிமாநாடுகளிலும் எங்களின் உறுதியான நிலைப்பாடு பிரதிபலிக்கப்படும். இந்த மூன்று உச்சிமாநாடுகளில் நாம் பார்ப்போம். யார் நண்பர், யார் பங்குதாரர், பணத்திற்காக நம்மைக் காட்டிக் கொடுத்தவர் யார் என தெரிய வரும் என்றார்.
மார்ச் 24, 2.45 PM
உக்ரைன் மீது போர் தொடுத்து புதின் மிகப்பெரிய தவறை ஏற்படுத்திவிட்டார் என நேட்டோ தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா பயன்படுத்தும் எந்தவொரு ரசாயன ஆயுதங்களும் நேட்டோ நாடுகளை கடுமையாக பாதிக்கும் என அதன் பொது செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனித நேயம் நிலவரம் குறித்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவு அளிக்காததால் ஐ.நா., பாதுகாப்பு குழு கூட்டத்தில் ரஷியா தேல்வியை தழுவியது.
மார்ச் 24, 1.45 PM
மார்ச் 24, 12.32 PM
மார்ச் 24, 11.49 AM
மார்ச் 24, 11.10 AM
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவியுங்கள் -அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ரஷியாவை எதிர்கெண்டு ஒரு மாதம் தெடர்ந்து பேராடி வரும் நமது தைரியத்தை பாராட்டி மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவியுங்கள் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டு கெண்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் மக்கள் தங்களின் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகேள் விடுத்துள்ளார்.
மார்ச் 24, 9.24 AM
மார்ச் 24, 7.32 AM
மார்ச் 24, 6.33 AM
மார்ச் 24, 04.10
பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட் தனது மாஸ்கோ தொழிற்சாலையின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது.
மார்ச் 24, 03.11
சோர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள காடு ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்ததாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 24, 02.20
உக்ரைன் தலைநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷிய நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் அந்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மார்ச் 24, 01.05
உக்ரைனில் முழு அளவிலான ரஷியாவின் போர் நடவடிக்கையால் கார்கிவ் நகரில் இதுவரை 1,143 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில மேயர் இகோர் தேரேகோவ் (Ihor Terekhov) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கார்கிவ் மேயர் இகோர் தேரேகோவ், ரஷியப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில் 1,143 கட்டிடங்களை அழித்தன, அவற்றில் 998 குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும் என்று தெரிவித்தார்.
மார்ச் 24, 12.10
உக்ரைனில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய ரஷிய போரால், 1 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் போரில் கொன்று குவிக்கப்பட்டிருப்பது அந்த நாட்டின் துயரமாக மாறி உள்ளது.
உக்ரைன் தலைநகரான கீவ் நகர் மீது நேற்று ரஷிய படைகள் நடத்திய குண்டுவெடிப்புகள், அந்த நகரை குலுங்க வைத்தது. வடமேற்கில் இருந்து பீரங்கி தாக்குதல், தொடர்ந்து நடத்தப்பட்டது. துப்பாக்கி சண்டைகளும் கீவ் நகரில் இடைவிடாமல் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறநகரான புச்சா, ஹோஸ்டமெல், இர்பின் ஆகிய நகரங்களில் குறிப்பிட்ட பகுதிகளை ரஷியப்படைகள் தங்கள் வசப்படுத்தின.
ரஷிய படைகள் கைப்பற்றிய இடங்களை மீட்பதற்காக உக்ரைன் படைகள் தீரமுடன் சண்டையிடுகின்றன. இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் உறுதி செய்தார்.
கீவ் நகரின் புறநகரான மகாரிவ்வை ரஷியப்படைகளிடம் இருந்து மீட்டுள்ள உக்ரைன் படைகள், அங்கு உக்ரைன் கொடிகளை நேற்று பறக்கவிட்டுள்ளன.
மேலும் விவசாய நகரமான வோஸ்னென்ஸ்க் நகரில் ரஷியப்படைகளை உக்ரைன் படைகள் பின்னுக்கு தள்ளி உள்ளன. இது ரஷியாவுக்கு கிடைத்துள்ள அடியாக பார்க்கப்படுகிறது.
ரஷிய படைகள், உணவு, எரிபொருள், வெப்பக்கருவி ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பூமியின் நரகமாக மாறியுள்ள மரியுபோல் நகரை நினைத்தபடி எளிதான வகையில் கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் திணறி வருகின்றன. உக்ரைன் படைகள், அவர்களின் முயற்சிக்கு மாபெரும் தடைச்சுவராக நின்று பதில் தாக்குதல் தொடுத்து வருகின்றன.
இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி உள்ளனர். ஆனாலும் இன்னும் 1 லட்சம் மக்கள் இங்கு சிக்கித்தவிப்பதாக தெரிய வந்துள்ளது. மின்சாரம், உணவு, தண்ணீர் கிடையாது. தகவல் பரிமாற்றம் இல்லை. மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் கூடிய தங்களது வாகனங்கள், மரியுபோல் நகருக்கு நுழைய முடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.
அசோவ் கடலில் ரஷிய கப்பல்கள், மரியுபோல் நகர ஏவுகணை தாக்குதலில் இணைந்துள்ளன. அங்கு மொத்த 7 ரஷிய போர் கப்பல்கள் முற்றுகையிட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செர்னோபில் அணு மின் நிலையத்தில் இருந்த ஒரு ஆய்வு கூடத்தை ரஷிய படைகள் அழித்தன.
இதற்கிடையே உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க ரஷியா மறுத்துவிட்டது.
இதுபற்றி ரஷிய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, இது ஏற்கனவே இருந்து வருகிற அச்சுறுத்தல் என்றால், அது அப்படியே இருக்கலாம் என தெரிவித்தார். இது உக்ரைன் மீதான ரஷியாவின் அணு ஆயுத மிரட்டலாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினார். ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான சமரச பேச்சு வார்த்தை உள்ளிட்ட அம்சங்கள் பேச்சு வார்த்தையில் இடம் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்ற ரஷியாவின் முக்கிய கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.