லக்சம்பர்க்,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இந்த நாட்டில் சாலைகளை கார்கள் பெருமளவு ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில், இந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இலவச பொதுபோக்குவரத்தை வழங்குகிற முதல் நாடு என்ற பெயரை இந்த நாடு தட்டிச்செல்கிறது. லக்சம்பர்க் நாட்டில் வாழ்கிறவர்கள் ரெயில்களில் முதல் வகுப்பில் பயணிக்கவும், பஸ்களில் இரவு நேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.