உலக செய்திகள்

மாலியிலிருந்து பிரான்ஸ் துருப்புகள் வாபஸ்

மாலியிலிருந்து பிரான்ஸ் துருப்புகளை வாபஸ் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

பாரீஸ்,

மாலி நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு மத அடிப்படையிலான போராளிகளை எதிர்த்து பிரான்ஸ் படை வீரர்கள் சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையில் மாலியில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இதையொட்டி, பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய கூட்டமைப்பு-ஆப்பிரிக்கா மாநாட்டுக்கு முன்னதாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், மாலியில் இருந்து பிரான்ஸ் துருப்புகள் வாபஸ் பெறப்படுகின்றன. இது ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கனடாவுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட விலகலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சஹேலில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற விருப்பமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை