உலக செய்திகள்

பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

பிலிப்பைன்சில், கடந்த 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 220-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

தினத்தந்தி

மோரோ கல்ப்,

பிலிப்பைன்சின் மோரோ கல்ப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

எரிமலை மற்றும் நிலநடுக்க தாக்கத்திற்கு பிலிப்பைன்ஸ் நாடு உள்ளாவது என்பது அதிகரித்து காணப்படுகிறது. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அது அமைந்துள்ளது, இதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

பிலிப்பைன்சில், கடந்த 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 220-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு