உலக செய்திகள்

சூரியனில் வீசும் புயலால் பூமியின் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு.!

பூமியைத் தாக்கும் மிகப்பெரிய சூரிய புயலால் ஜி.பி.எஸ், தொலைபேசி சிக்னல்கள் சேதமடைய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

சூரியனில் வீசும் புயலால் பூமியின் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒரு சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்றும் இது பூமியின் காந்தப்புலத்தை தாக்கும் என நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மிகப்பெரிய சூரிய புயல் பூமியின் மேல் வளிமண்டலத்தில் இயங்கும் செயற்கைக்கோள்களைத் தாக்கும், இது ஜி.பி.எஸ், மொபைல் போன் சிக்னல்கள் மற்றும் செயற்கைக்கோள் பாதிக்கும்.

உலகின் சில பகுதிகளில் மின் அமைப்புகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. வலுவான காற்று பூமியின் காந்த மண்டலத்தில் புவி காந்த புயலைத் தூண்டக்கூடும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு