உலக செய்திகள்

நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும்; ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

வாஷிங்டன்,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபங்களின் ஒளியை போற்றும் வகையில் மண் விளக்குகளை கொண்டு தீபங்களை ஏற்றி ஒளியை பரவ செய்து கொண்டாடும் இந்த விழாவில் மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒளியின் திருவிழாவை கொண்டாடும் கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துகள்.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு டாக்டர் ஜில் பைடன் உடன் சேர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய புது ஆண்டில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைய எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்து உள்ளார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்