உலக செய்திகள்

மாலி நாட்டில் நில கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி

மாலி நாட்டில் நில கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர். #explosion

பமகோ,

மாலி நாட்டில் பொதுமக்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பர்கினோ பசோ நாட்டு மக்கள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், எல்லை பகுதியருகே அந்த வாகனத்தினை ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதிகள் நில கண்ணிவெடி ஒன்றை கொண்டு வெடிக்க செய்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 26 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன் மாலியின் வடக்கே பாலைவன பகுதியில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்த ஐ.எஸ். குழுக்கள் தெற்கு பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தனது ஆதிக்கத்தினை செலுத்த தொடங்கியுள்ளது.

#explosion #landmine

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்