உலக செய்திகள்

கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76,398 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 78 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கையும் 1,621 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனா வைரஸ் போகாது. நாம் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் வாழவும் முடியும் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்