உலக செய்திகள்

பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் வடகொரிய அதிபர் ஆலோசனை

இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NorthKorea #KimjongUn

தினத்தந்தி

சியோல்,

கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது

இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.அந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியா வந்தார்.

மேலும், நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங்-உன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சூழலில், வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நல்லெண்ணத் தூதுக் குழுவை வட கொரியாவுக்கு அதிபர் மூன் ஜே-இன் அனுப்பினார்.

வடகொரியாவுக்கு வந்த தென்கொரிய குழு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை தணிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு