உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் நாசா ரோவரின் முயற்சி தோல்வி

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்கிற ரோவரை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய்வதற்காக

அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள 7 அடி நீளமுள்ள ரோபோ கையில் தரையில் துளையிடுவதற்கான கருவி மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட மாதிரிகளை சேமித்து வைக்க 43 டைட்டானியம் குழாய்களும் உள்ளன. அதன்படி பெர்சவரன்ஸ் ரோவர் மாதிரிகளை சேகரிக்கும் தனது முதல் முயற்சியில் தரையில் வெற்றிகரமாக துளையிட்டது. ஆனால் அதிலிருந்து பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. பெர்சவரன்ஸ் ரோவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்