உலக செய்திகள்

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்? ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தகவல்

கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதில் இருந்து வெகுதொலைவில் உள்ளது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

நியூயார்க்,

சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகமெங்கும் பரவி நீடித்து வருகிறது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உலகமெங்கும் ஒவ்வொரு நாளும் 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆசியாவில் பெரிய வெடிப்பு பரவுகிறது. ஐரோப்பா முழுவதும் புதிய அலை பரவி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எனவே, கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

அரசாங்கங்களும், மருந்து கம்பெனிகளும் எல்லா இடத்திலும் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி சென்றடைய பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது