வாஷிங்டன்
அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதகரகத்தை மூட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதையடுத்து இருநாடுகளிடையே விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் சில தூதரகங்களை மூடப்போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீன ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி டாங் யுவான் என்பவர் ஆய்வு மாணவி என்ற போலியான காரணத்துக்காக விசா விண்ணப்பம் செய்திருப்பதை கண்டுபிடித்து எப்பிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஹூஸ்டனில் இருந்த துணைத் தூதரகம்தான் அமெரிக்காவின் அறிவுசார் திருட்டில் ஈடுபட்ட மையமாக இருந்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஜனநாயக ரீதியான நிர்வாகமுறைகளில் சீனாவுக்கான வாசல்களை அமெரிக்கா திறந்து வைத்தது
அந்நாட்டுடன் வர்த்தகம் நடத்தப்பட்டது. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருநாடுகளும் பங்கேற்றன. ஆனால் இத்தகைய அமெரிக்க அரசின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நம்பகத்தன்மையற்ற சரிபார்க்க வேண்டிய புதிய கொள்கை வகுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்