உலக செய்திகள்

தூதரக உறவை துண்டிப்பதாக அறிவிப்பு: மலேசியாவிலிருந்து வெளியேறிய வடகொரிய தூதரக ஊழியர்கள்

தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து மலேசியாவிலிருந்து வடகொரிய தூதரக ஊழியர்கள் வெளியேறினர்.

கோலாலம்பூர்,

மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக் கொண்டது.

இதனை ஏற்று முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது. இதனால் கடும் கோபமடைந்த வடகொரியா மலேசியாவுடனான தூதரக உறவுகளை முழுமையாக துண்டிப்பதாக நேற்று அறிவித்தது.

இந்த சூழலில் வடகொரியா நபரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசியா உடனான தூதரக உறவை துண்டிப்பதாக வடகொரியா அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று வடகொரியா தூதரக ஊழியர்கள் அனைவரும் மலேசியாவில் இருந்து வெளியேறினர்.

முன்னதாக, மலேசிய தலைநகா கோலாலம்பூரின் புகா பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய தூதரகத்தில் அந் நாட்டின் தேசியக்கொடி மற்றும் குறியீடுகளை வடகொரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினா. பின்னா அந்த அதிகாரிகளும், அவாகளுடைய குடும்பத்தினரும் இரண்டு பேருந்துகளில் விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு