உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மனைவியுடன் வந்து வாக்களித்தார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மனைவி ஜில்லுடன் வந்து ஜோபைடன் வாக்களித்தார்.

வாஷிங்டன்,

நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடன், அவரது மனைவி ஜில்லும் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தார். வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பைடன் வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜோ பைடன் கூறியதாவது:-

பிலடெல்பியாவில் கறுப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொலை செய்த நிலையில் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துகொள்கிறேன். தான் அதிபரானால் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புளோரிடாவில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்