புதுடெல்லி,
உலகின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2022 ஆம் ஆண்டு பிறந்தது.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பயம் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என உலகம் நினைத்திருந்தது. ஆனால் ஒமைக்ரான் எனும் புதிய வகை உறுமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் குறைத்துக் கொள்ளப்பட்டது.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புகழ்பெற்ற பால்-டிராப் எனப்படும் கிறிஸ்டல் பேனல்களால் ஒளிமயமாக்கபட்ட பந்துகள், புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 6 டன் எடையுள்ள 2700 வாட்டர்போர்டு கிறிஸ்டல்களால் ஆன பந்து டைம்ஸ் சதுக்கத்தின் உச்சியிலிருந்து ஒரு கம்பம் வழியாக கீழே விடப்படும். நள்ளிரவு 11 மணி 59-வது நிமிடத்தில் கீழே விடப்படும் இந்த ஒளிமயமான பந்து, சரியாக 1 நிமிடத்தில், அதாவது புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் கீழே வந்து சேரும்.காலம் காலமாக இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
58 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் இந்த நிகழ்ச்சியை இந்த முறை 15 ஆயிரம் பர்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
நியூயார்க் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டாம், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வெட்டவெளியில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தகுதியுடைய 15,000 பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் புத்தாண்டு வழக்கம் போல களைகட்டவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தென் கொரியாவில், பாரம்பரிய நள்ளிரவு மணி அடிக்கும் விழா இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டது. டோக்கியோவின் பளபளக்கும் ஷிபுயா மாவட்டத்தில் விழாக்கள் தடை செய்யப்பட்டன
சீனாவில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
மலேசியாவின் கோலாலம்பூரில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டாசு வானவேடிக்கை நிகழ்ச்சி இம்முறை நடைபெறவில்லை.
பிரான்சின் பாரிசில் எண்ணி பார்க்க இயலாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் புத்தாண்டு பார்ட்டிகள் மற்றும் வானவேடிக்கைகள் ஏதுமின்றி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் 4 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடியிருந்ததால் போலீசார் அவர்களை விரட்டிய சம்பவம் நடைபெற்று உள்ளது.
லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், ஒமைக்ரான் முதன்முதலாக கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் ஆச்சரியமளிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.
அதேபோல ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் வானவேடிக்கை ஒளி அலங்காரத்துடன் களைகட்டியது.
துபாயின் புர்ஜ் காலிபாவில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது.
மாட்ரிடில் வரிசையில் காத்திருந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து மாட்ரிட் நகரத்துக்கு பயணம் மேற்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நள்ளிரவில் அடிக்கும் கடிகாரத்தின் ஒவ்வொரு மணி ஒலிக்கும் 12 திராட்சைப்பழங்களை வாயில் திணிப்பதன் மூலம் புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது.
பூமியில் மட்டுமின்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் உண்டு. 2022-ம் ஆண்டை விண்வெளி வீரர்கள் வரவேற்றனர்.