ஜெருசலேம்,
இஸ்ரேலில் நேற்று 20 பேர் புதிய வகை ஓமைக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, அரபு நாடுகள், ஹங்கேரி, பெலாரஸ், இத்தாலி மற்றும் நமீபியா போன்ற வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்த பயணிகள் என்றும் மேலும் 11 பேர் இந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் மீதமுள்ள 8 பேர் அவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த 55 பேர்களில் 13 பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஆறு மாதத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என தெரிவித்துள்ளது. மேலும், 51 பேர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு ஓமைக்ரான் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சோதனை முடிவுகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் கூறியுள்ளது.