உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரு மில்லியனை கடந்த கொரோனா பாதிப்புகள்: 59 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் ஒரு மில்லியனை கடந்துள்ளன. மேலும் பலி எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் 31 லட்சத்து 36 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 813 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம், பிற நாடுகளை விட அதிகமாக உள்ளது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது அமெரிக்காவில்தான். அங்குதான் அதிக எண்ணிக்கையில் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. அங்குதான் அதிக எண்ணிக்கையானவர்களுக்கு பரிசோதனைகளும் நடைபெறுவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பங்காகும். தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 266 ஆக உள்ளது.

இந்த எண்ணிக்கை வியட்நாம் போரில் சந்தித்த உயிரிழப்புகளை காட்டிலும் அதிகமானதாகும். வியட்நாம் போரில் 58,220 அமெரிக்கர்கள் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது