இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்தால் 5 லட்சம் அகதிகள் பாகிஸ்தானுக்கு வருவார்கள் என அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஆப்கானிஸ்தான் விவரங்களை கண்காணிக்கும் குழு ஒன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலீபான் பயங்கரவாதிகளின் கை ஓங்கி இருப்பதை சுட்டிக்காட்டி ஆப்கானிஸ்தான் தீவிர உள்நாட்டு போரை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது பாகிஸ்தானுக்கு நல்லது அல்ல என்றும் பயங்கரவாதத்தின் எழுச்சி மற்றும் ஆப்கானிய அகதிகளின் வருகைக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.