இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டில் வெடிகுண்டுகளை வீசியதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய விமானப்படையின் தாக்குதலில் மரங்கள் அழிந்துள்ளது, இது சுற்றுசூழல் பயங்கரவாதம் என பாகிஸ்தான் ஐ.நா.வில் புகார் தெரிவித்தது. இதற்கிடையே தாக்குதல் தொடர்பாக சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் கட்டிடம் சிதைந்ததா? என்ற விவாதம் தொடர்கிறது.
இந்நிலையில் மரங்களை அழித்துவிட்டது என பாகிஸ்தானில் இந்திய விமானப்படைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலகோட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அடையாளம் தெரியாத விமானி 19 மரங்களை அழித்துவிட்டார் என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.