உலக செய்திகள்

எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வபோது அத்துமீறி இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 5,133 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசுகுற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் 244 தீவிரவாத தாக்குதலில் 62 வீரர்கள் மற்றும் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று, பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் மாவட்டத்தின் மூன்று இடங்களில் அத்துமீறி சிறிய வகை துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், கொத்து குண்டுகளை வீசியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பாகிஸ்தானியர் காயம் அடைந்ததாக கூறும் பாகிஸ்தான், அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு