லாகூர்,
பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை அருகே 400 அடி உயர கொடிக்கம்பத்தில் அந்நாட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் பாகிஸ்தான் ரானுவ தளபதி கிமார் ஜாவீத் பாஜ்வா இந்த தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தெற்காசியாவில் பறக்கவிடப்பட்டுள்ள மிக உயரமான கொடிக்கம்பம் இதுவாகும். உலகில் 8-வது உயரமான கொடிக்கம்பம் இதுவாகும்.