உலக செய்திகள்

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே விமானம் விழுந்து விபத்து

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

கராச்சி,

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் (பிஐஏ) தரையிறங்கும் போது, கராச்சி விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்திலிருந்து புகை வெளியாகி வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தினை பாகிஸ்தான் சர்வதேச விமான செய்தித் தொடர்பாளர் அப்துல் சத்தார் உறுதிசெய்துள்ளார். மேலும் இந்த ஏ -320 என்ற விமானம் 90 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதில் பயணம் செய்த 90 பயணிகளின் நிலை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்