உலக செய்திகள்

கர்தார்பூர் செல்ல இந்திய சீக்கியர்களுக்கு அனுமதி; பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள புகழ்பெற்ற சீக்கிய குருத்வாராவுக்கு இந்திய சீக்கியர்கள் சென்று வர சிறப்பு வழித்தடம் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை அதிகரித்ததால் கடந்த மே 22-ந்தேதி முதல் இந்தியர்களை பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே பாகிஸ்தானுக்குள் இந்தியர்களை அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் நினைவு தினம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 22-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஏராளமான இந்திய சீக்கியர்கள் கர்தார்பூர் சென்று வருவது வழக்கம்.

எனவே இதை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் முதல் இந்தியர்கள் கர்தார்பூர் செல்ல அனுமதிப்பது என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 2 டோஸ் தடுப்பூசியும் போட்ட இந்திய பக்தர்கள் பாகிஸ்தான் செல்லலாம். எனினும் விமான கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு