உலக செய்திகள்

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் கலாச்சார தலைநகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.ரஷ்ய பிரதமர் புதின் உள்ளிட்டோருடன் உயர்மட்ட சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், பீட்டர்ஸ்பர்க் நகரில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்களின் நினைவிடம் இருக்கும் பகுதிக்குச்சென்ற பிரதமர் மோடி அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வீரர்களின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரண்டாம் உலகப்போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களில் பிஸ்கரேவ்ஸ்க் நினைவகம்தான் மிகப்பெரியது ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்