உலக செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் போராடிய பெண்ணை தாக்கிய காவல்துறை...!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் போராடிய பெண்ணை ரஷ்ய காவல்துறையினர் தாக்கினர்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை விரிவு படுத்த புதின் நேற்று உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, ரஷ்யா ராணுவ படை உக்ரைனை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரிய பலத்தை கொண்டுள்ள ரஷ்ய படைக்கள் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரஷ்ய காவல்துறையினர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். மேலும் அந்த இடத்தில் இருந்து அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கிசென்றனர். அருகில் இருந்த பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தப்படியே நின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு