உலக செய்திகள்

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை

ஐக்கிய நாடுகள் அவையின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

தினத்தந்தி

நியூயார்க்,

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநா பொதுச்சபையின் 74 வது கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மேடி ஐநா பெதுச்சபை கூட்டத்தில் பேசுவது இது 2 வது முறையாகும்.

இதற்கு முன் 2014ம் ஆண்டும் அவர் ஐநா பெதுச் சபையில் பேசியுள்ளார். பிரதமர் மேடியை தெடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச உள்ளார்.

காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வரும் நிலையில் இங்கும் இம்ரான் கான் அப்பிரச்னை குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. எனினும் காஷ்மீர் குறித்து பிரதமரின் உரையில் எத்தகவலும் இடம் பெறாது என இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு