File image 
உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் அங்கோரம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.

தினத்தந்தி

ஹாங்காங்,

பப்புவா நியூ கினியாவில் உள்ள அங்கோரம் பகுதியில் இருந்து வடக்கு- வடகிழக்கே 66 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.33 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10.0 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 3.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 144.25 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பப்புவா நியூ கினியாவின் பங்குனாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்கு உட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்