இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வாத் என்ற இடத்தில் இருந்து சிந்த் மாகாணத்தின் தாடு என்ற பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த பேருந்தில் புனித பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் பயணித்து உள்ளனர்.
இந்நிலையில், குஜ்தார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து சாலையில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 15 பேர் சம்பவ பகுதியிலேயே பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
எனினும், விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மொத்தம் 18 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இந்த நிலையில், பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது என மருத்துவ உயரதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். கடந்த வாரம் சிந்த் மாகாணத்தில் 2 ரெயில்கள் மோதி கொண்டதில் 62 பேர் கொல்லப்பட்டனர்.