உலக செய்திகள்

வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஈரான் கண்காணித்து வருகிறது - அதிபர் ரவுகானி

வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை, ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

டெஹ்ரான்,

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் உள்ளது. கொரோனா வைரசின் பரவலை எதிர்த்து போராடுவதற்கான தங்களது முயற்சிகளுக்கு அமெரிக்க பொருளாதார தடைகள் பெரும் இடையூறாக இருப்பதாக ஈரான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச விதிகளை மீறும் ஈரானின் போர் கப்பல்களை அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய சூழல் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், எனினும் பிராந்தியத்தில் நாங்கள் மோதலை ஆரம்பிக்க மாட்டோம் என்று கத்தார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு