மாஸ்கோ,
லாட்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்களின் விமானங்கள் ஆகியவற்றுக்கு ரஷியா தனது வான்பகுதியை மூடியுள்ளது.
மேற்கண்ட நாடுகளின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவுகள் எடுத்ததால், ரஷியாவில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. பயண வழியில் நிற்பதற்கும் தங்கள் வான்பகுதியை மேற்கண்ட நாட்டு விமானங்கள் பயன்படுத்தக்கூடாது என்று ரஷிய விமான போக்குவரத்து நிறுவனம் கூறியுள்ளது.