Image Courtesy: AFP 
உலக செய்திகள்

கார்கிவ் நகரில் இதுவரை 1,143 கட்டிடங்கள் ரஷிய படைகளால் தகர்ப்பு ..!!

கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள 1,143 கட்டிடங்களை தகர்த்துள்ளதாக அம்மாநில மேயர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கார்கிவ் ,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 25-வது நாளாகியும் தொடர்ந்து நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனில் முழு அளவிலான ரஷியாவின் போர் நடவடிக்கையால் கார்கிவ் நகரில் இதுவரை 1,143 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில மேயர் இகோர் தேரேகோவ் (Ihor Terekhov) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கார்கிவ் மேயர் இகோர் தேரேகோவ், ரஷியப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில் 1,143 கட்டிடங்களை அழித்தன, அவற்றில் 998 குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும் என்று தெரிவித்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை