உலக செய்திகள்

‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு குவியும் மாடல் வாய்ப்பு

‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு மாடலாகும் வாய்ப்பு குவிந்து வருகிறது

மாஸ்கோ,

ரஷியாவில் கொரோனா வைரசால் 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கபட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏறபட்டு உள்ளன.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் நர்ஸ் பணிபுரிந்து வருகிறார். இப்போது ரஷியாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரோனா வைரஸ் வார்டில்

பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.ஆனால் ரஷியா முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது.அவரது சக செவிலியர்களூம் மருத்துவர்களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ததால் பரபரப்பை ஏற்படுத்திய நர்ஸ் நடியா ( வயது 23) அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சர்ச்சையிலும் அவருக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது.தற்போது பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுவனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு