தெற்கு சாண்ட்விச் தீவுகள்,
தெற்கு சாண்ட்விச் தீவு பகுதியில் நேற்று (வெள்ளி கிழமை) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் 43.81 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.