உலக செய்திகள்

இலங்கையில் 12 வயதைக் கடந்த சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

இலங்கையில் 12 வயதைத் தாண்டிய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அங்கு 30 வயதைக் கடந்தவர்களுக்கு சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர அஸ்ட்ரா செனகா, பைசர், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகளும் இலங்கையில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் 12 வயதைக் கடந்த சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கொரோனாவை படிப்படியாக கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிட்டிருக்கிறோம். முதலில் 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 30 வயதைக் கடந்தவர்களில் 1.1 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 3,698,303 பேருக்கு என்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்