உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து அனுப்பிய 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றது

இந்தியாவில் இருந்து அனுப்பிய 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை அரசு பெற்றுக்கொண்டது.

கொழும்பு,

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அண்டை நாடான இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை கடந்த ஜனவரி மாதம் பரிசாக அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் வாங்குவதற்கு இலங்கை அரசு மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

அந்த அடிப்படையில் 5 லட்சம் தடுப்பூசிகள், இலங்கைக்கு இந்திய சீரம் நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த தடுப்பூசிகளை இலங்கை நேற்று பெற்றுக்கொண்டது.

இதையொட்டி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கொரோனாவை இலங்கை வெல்ல தீவிரமாக உதவுகிறோம். 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று வந்து சேர்ந்தது என கூறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை போடும் பணி இன்று தொடங்கி விடும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்