உலக செய்திகள்

பாக்தாத்தில் தற்கொலைபடை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழப்பு

பாக்தாத்தில் தற்கொலைபடை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியின் முசாயிப் நகரின் மார்க்கெட் பகுதியில் தற்கொலைபடை திவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள முசாயிப் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 17 பேர் காயமடைந்து உள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.