உலக செய்திகள்

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி

தைவான் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தைபே,

தைவான் நாட்டின் தெற்கே காவோசியங் நகரில் 13 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த தீயானது அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால், கரும்புகை பரவி வான் வரை சென்றது. இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், புகை மூட்டம் மற்றும் தீ பரவல் கடுமையாக இருந்தது தீயணைப்பு பணிக்கு இடையூறாக இருந்தது.

முதற்கட்ட தகவலின்படி, 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுதவிர, மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 55 பேரில் 14 பேர் உயிரிழந்தனர். இன்று மாலைக்குள் கட்டிடம் முழுவதும் தேடி, மீட்பு பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்