பெய்ரூட்,
லெபனான் நாட்டின் வடக்கே அக்கார் பகுதியில் கேசோலின் என்ற எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
லெபனானில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை சிரியாவுக்கு கடத்தப்படுகின்றன. அதேபோல், கடத்தி வரப்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை லெபனான் ராணுவம் பறிமுதல் செய்து, லெய்ல் கிராமத்தில் நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்தது. இதில் 28 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 79 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.