உலக செய்திகள்

சூடானில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் உடல் சிதறி பலி

சூடானில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் உடல் சிதறி பலியாயினர்.

தினத்தந்தி

மாஸ்கோ,

சூடான் நாட்டின் தலைநகர், கார்ட்டூம். இங்குள்ள அல் சேக்லா பகுதியில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் உடல் சிதறி பலியானதாக சவுதி அல் அரேபியா டி.வி. சேனல் தெரிவித்தது. போலீஸ் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை சவுதி அல் அரேபியா டி.வி. சேனல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் பாதுகாப்பு சேவை துறையின் மறுகட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த துறையினர் கடந்த வாரம் கார்ட்டூம் நகரில் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு சேவை துறையினருக்கும் நடந்த மோதல்களில் சூடான் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதும், 7 பேர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது