உலக செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி - டிரம்ப் அறிவிப்பு

சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், 6ந் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார். இதுபற்றி வெள்ளை மாளிகை வக்கீல்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், டிரம்ப் இதுகுறித்து அரசு உத்தரவு பிறப்பித்தாலோ, நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்தாலோ கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்