உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,55,920 ஆக உயர்வு

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23,55,920 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலியா,

சீனாவின் உகான் நகரில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7,720 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 55 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 177 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து, பலியானோர் மொத்த எண்ணிக்கை 85,562 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா பாதிப்புபில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,92,281 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 78 ஆயிரத்து 077 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்