அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் 
உலக செய்திகள்

சர்வதேச அமைப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தும் சீனாவை அமெரிக்கா பொறுப்பேற்க வைக்கும்; அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உறுதி

அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் சீன வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் யாங் ஜீச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தினத்தந்தி

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரு நாட்டின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் சீனாவின் ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தினார். மேலும் மியான்மரில் நடந்த ராணுவ சதித்திட்டத்தை கண்டித்து சர்வதேச சமூகத்தில் சேர சீனாவுக்கு அவர் அழுத்தம் கொடுத்தார் எனக் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியுடன் நடந்த உரையாடல் குறித்து ஆண்டனி பிளிங்கன் குறிப்பிடுகையில் சீனப் பிரதிநிதியுடனான எனது உரையாடலில் அமெரிக்கா தனது தேசிய நலன்களை பாதுகாக்கும், ஜனநாயக மதிப்புகளுக்காக எழுந்து நிற்கும் மற்றும் சர்வதேச அமைப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கும் என்பதை நான் தெளிவு படுத்தினேன் என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு