கீவ்,
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனில் இருந்து 17,000 இந்தியர்கள் எல்லைப்பகுதிகளுக்கு வெளியேறி உள்ளதாகவும் உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் எல்லை நகரங்களில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6 விமாங்களில் 3,352 இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும் இந்தியர்கள் பாஸ்போர்ட் இழந்திருந்தால் புதிய பாஸ்போர்ட் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.