வாஷிங்டன்,
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளாராக போட்டியிடும் ஜோ பிடென் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜோ பிடென் கூறியிருப்பதாவது:- இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தடைகளையும் கடந்து புதிய தொடக்கமாக இருக்க வேண்டும் என ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார்.