ஆனால் பாதுகாப்பு படையினர் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலீபான்களின் ஆயுதங்களும், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டன. மைவான்ட் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் கண்டறிந்து செயலிழக்க வைக்கப்பட்டன.
இதேபோன்று பால்க் மாகாணத்தில் தலீபான்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொரு தாக்குதலில் 12 பேர் பலியாகினர். பத்கிஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் 8 தலீபான்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், தலீபான்கள் கண்ணிவெடிகளை புதைத்தபோது அவை வெடித்து 2 பேர் உயிரிழந்தனர்.
ஒரே நாளில் 53 தலீபான் பயங்கரவாதிகள் இப்படி கொல்லப்பட்டிருப்பது அவர்களுக்கு விழுந்த பயங்கர அடியாக பார்க்கப்படுகிறது.