உலக செய்திகள்

துருக்கி: விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் பலி

துருக்கியில் நடைபெற்ற விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். #Turkey

தினத்தந்தி

இஸ்தான்புல்,

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள சாப் மாகாணத்தில், காரா மற்றும் ஹக்குர்க் பகுதிகளில், துருக்கி விமானப்படை நடத்திய வான் வழித்தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கோன்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். அங்கிருந்தபடி துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.

துருக்கி அரசுக்கு எதிராக எழுச்சி பெற குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, 1984ம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை