கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் அதிக அளவாக ஒரேநாளில் 1,564 பேர் பலி

இங்கிலாந்தில் இன்று புதிதாக 47,525 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் லண்டனில் பெரிய மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இன்று புதிதாக 47,525 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 32,11,576 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் அதிக அளவாக ஒரேநாளில் 1,564 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 84,767 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்