உலக செய்திகள்

ரஷியா - உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரிகள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்து பேச திட்டம்

சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன.

சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா.

அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபடியாக ரஷிய- உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரிகள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளனர். உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ட்மிரோ குலேபா மற்றும் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை பகுதியான அண்டலியா மாகாணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்