கோப்புப் படம் 
உலக செய்திகள்

அமெரிக்காவில் நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 10 பேர் காயம்

அமெரிக்காவில் நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

அயோவா,

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

சிடார் ரேபிட்ஸ்-ல் உள்ள நைட் கிளப்பில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.27 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது